• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • IT Jobs: ஒரு லட்சம் பேரை வேலைக்கு எடுக்க TCS, HCL, WIPRO, இன்போசிஸ் திட்டம் - இளைஞர்களே தயாராகுங்கள்!

IT Jobs: ஒரு லட்சம் பேரை வேலைக்கு எடுக்க TCS, HCL, WIPRO, இன்போசிஸ் திட்டம் - இளைஞர்களே தயாராகுங்கள்!

ஐடி துறையில் வேலை

ஐடி துறையில் வேலை

நடப்பு நிதியாண்டில் மேலும் 35,000 ஊழியர்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளனர்.

  • Share this:
ஐடி துறையில் வேலை தேடுபவர்களுக்காக ஒரு நற்செய்தி வெளியாகியிருக்கிறது. முன்னணி ஐடி நிறுவனங்களான டி.சி.எஸ், ஹெச்.சி.எல் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் ஒரு லட்சம் பேரை புதிதாக வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஐடி துறையில் வேலை தேடுபவராக இருந்தால், உங்களுக்கான நற்செய்தி தான் இது. கொரோனா தாக்கத்துக்குப் பிறகு ஐடி துறையில் மிகப்பெரிய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இதனால், புதிதாக ஆட்களை தேர்வு செய்து பணியமர்த்துவது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது உயர்ந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் இன்போசிஸ், டி.சி.எஸ், ஹெச்.சி.எல், விப்ரோ நிறுவனங்கள் சுமார் ஒரு லட்சம் புதிய ஊழியர்களை பணிக்கு தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

அந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ள காலாண்டு வருவாய் புதுப்பிப்பு தகவலின்படி, நான்கு நிறுவனங்களும் புதிதாக பணிக்கு அமர்ந்த வேண்டியவர்களின் கணிப்புகளை யூகமாக தெரிவித்துள்ளன. அதில் வரும் நாட்களில் புதிதாக ஊழியர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறியுள்ள அந்த நிறுவனங்கள், இந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் சுமார் 1,02,517 பேரை புதிதாக பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

ALSO READ |  TNPSC குரூப் 4, விஏஓ தேர்வுகள் அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு....

ஐடி துறையில் இந்தியாவில் இருக்கும் மொத்த நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையில், இந்த நான்கு நிறுவனத்தில் மட்டும் நான்கில் ஒரு பகுதியினர் பணியாற்றி வருகின்றனர். பெரியளவிலான புதிய ஒப்பந்தங்கள் மற்றும் வலுவான காலாண்டாக இதுவரை இருந்திருப்பதால், புதிய ஊழியர்கள் நியமனத்தில் இத்தகைய பாசிட்டிவான அணுகுமுறையை நிறுவனங்கள் எடுத்துள்ளன. புதிய பட்டதாரிகள் ஐடி துறையில் நுழைவதற்கு சரியான தருணமாகவும் இந்த வாய்ப்பு அமைந்துள்ளது.

டி.சி.எஸ் நிறுவனத்தின் தலைமை ஹெச்.ஆர் மலிந்த் லகாட் பேசும்போது," இந்த காலாண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் நிறைவான காலாண்டாக அமைந்திருக்கிறது. இதுவரை புதிதாக 43,000 புதிய பட்டதாரிகளை டி.சி.எஸ்ஸில் வேலைக்கு எடுத்துள்ளோம். எங்களின் ஷிப்ட் லெப்ட் பயிற்சி உத்தி, புதிய பணியாளர்களை சரியான நேரத்தில் விரைவாக பணிக்கு கொண்டுவருவதற்கு உதவியாக இருந்தது. நிறுவனத்துக்கு தேவையான திறமைகளை உருவாக்குதற்கு முன்கூட்டியே முதலீடு செய்ததும், சப்ளை பக்கம் சவால்களை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களின் வளர்ச்சி மற்றும் மாற்றுத் திட்டங்களை செயல்படுத்தும் காலக்கெடுவை நிர்ணயிப்பதற்கும் இது உதவியாக இருந்தது.

ALSO READ |  இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையில் எழுத்தர் வேலை - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

நடப்பு நிதியாண்டில் மேலும் 35,000 ஊழியர்களை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளோம். அதன்மூலம் மொத்த நிதியாண்டில் பணிக்கு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 78 ,000 மாக உயரும்" என்று கூறினார். கடந்த காலாண்டில் டி.சி.எஸ்ஸின் அட்ரிஷன் விகிதம் 8.6 ஆக இருந்து 11.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று காலாண்டுகளுக்கு இந்தப் போக்கு நீடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் டி.சி.எஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதேபோல், இன்போசிஸ் நிறுவனமும் தேவை அடிப்படையில் வருவாய் அதிகரிக்கும் என கணித்துள்ளதால், புதியவர்களை பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. இன்போசிஸ்ஸின் அட்ரிஷன் ரேட் 13.9 லிருந்து 20.1 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதேபோல், விப்ரோ மற்றும் ஹெச்.சி.எல் நிறுவனங்களும் புதிய பட்டதாரிகளை பணிக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. இன்போசிஸ் 25,000 பேரையும், ஹெச்.சி.எல் அதிகபட்சமாக 22,000 பேரையும் பணிக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: