முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TCS BPS Hiring: டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை.... டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

TCS BPS Hiring: டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை.... டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இளங்கலை அறிவியல் மற்றும் வணிகவியல்  படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்

இளங்கலை அறிவியல் மற்றும் வணிகவியல்  படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்

இளங்கலை அறிவியல் மற்றும் வணிகவியல்  படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்,   வணிக சேவை, வங்கி  நிதிச்சேவைகள் மற்றும் காப்பீடு, உயிரின அறிவியல் ஆகிய துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிக முன்னனுபவம் இல்லாத வேலை தேடும் இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

2019, 2020, 2021 ஆகிய மூன்று வருடங்களில் இளங்கலை அறிவியல் மற்றும் வணிகவியல்  படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 10, 12 மற்றும் பட்டப்படிப்புகளில் 60% சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. www.tcs.com எனும் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tcs.com/careers/tcs-off-campus-hiring ' TCS Next Step Portal' எனும் லிங்கை கிளிக் செய்யவும்.

ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளை அங்கு காணலாம்.

கல்வித்தகுதி, வயது, கணினி சார்ந்த அறிவு, இருப்பிடம், சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைபடம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்காலத் தேவைகளுக்காக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு: குறைந்தபட்சமாக 18ம், அதிகபட்சமாக 28 ஆகவும் இருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். தொடர்புடைய துறைகளில் 3 மாதங்கள் வரை பணி அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு:  

Section name          No. of questions      Duration per section(in minutes)  
Numerical Ability2620
Verbal Ability2420
Reasoning Ability3025
Total8065

கணிதப் பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Numerical Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (Verbal Ability ) ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. சிறியளவு பயிற்சி இருந்தால் கூட வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இண்டிகோ நிறுவனத்தில் உதவி மேலாளர் பதவி: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் 

அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 022-67784065 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். ilp.support@tcs.com என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

First published:

Tags: TCS