TCS job Notification: நாட்டின் பிரதான தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடட் இந்தாண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஇ, பி.டெக், எம்.டெக், எம்சிஏ, எம்எஸ்சி ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்று, பெரிய நிறுவனங்களில் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 முதல் 28 வரை
2019, 2020, or 2021 ஆகிய வருடங்களில் கல்லூரி படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 10, 12 மற்றும் பட்டப்படிப்புகளில் 60% சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: இரண்டு நிலைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 1 . எழுத்துத் தேர்வு 2. நேர்காணல் தேர்வு.
எழுத்துத் தேர்வில் திறனறிவு, நிரலாக்க மொழி (Programming Language) சோதனை நடைபெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற முடியும்.
எழுத்துத் தேர்வு
பகுதி I |
Cognitive Skills |
|
Group Name |
Time |
1 |
Numerical Ability |
40 Mins |
2 |
Verbal Ability |
30 mins |
3 |
Reasoning Ability |
50 mins |
Total |
120 mins |
பகுதி II |
Programming |
1 |
Programming Logic |
15 mins |
2 |
Coding section |
45 mins |
Total |
60 mins |
Total Test Duration |
180 Mins |
NEET PG 2022: நீட் முதுகலை தேர்வு, ஆன்லைன் விண்ணப்பங்களைத் திருத்த அரிய வாய்ப்பு
விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. www.tcs.com எனும் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tcs.com/careers/tcs-off-campus-hiring ' TCS Next Step Portal' எனும் லிங்கை கிளிக் செய்யவும்.
ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளை அங்கு காணலாம்.
கல்வித்தகுதி, வயது, கணினி சார்ந்த அறிவு, இருப்பிடம், உடற்தகுதி, சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைபடம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

Jobs
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்காலத் தேவைகளுக்காக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 18002093111 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். ilp.support@tcs.com என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.