பாலின வேறுபாட்டை தகர்த்த டாடா ஸ்டீல்.. சுரங்கத்தில் பெண்களுக்கும் பணி வாய்ப்பு

மாதிரிப்படம்

பணியிலிருக்கும் பெண்களுக்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் நிறுவனம் ஏற்படுத்தித்தர வேண்டும் என்றும் டாடா வலியுறுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சுரங்கப் பணி என்பது ஆண்களுக்கானது மட்டும்தான் என்றில்லாமல் ஆர்வம் இருக்கும் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிறது டாடா ஸ்டீல்.

சுரங்கங்களில் பெண்கள் பணியாற்றுவதில்லை. கடினமான வேலை என்பதால் அதை ஆண்களுக்கு மட்டுமான பணி என ஒதுக்குவதில் நியாயமில்லை என்று கூறும் டாடா ஸ்டீல், பெண் பொறியாளர்களை சுரங்கங்களில் பணியமர்த்தி உள்ளது.

சுரங்க சட்டம் 1952 சட்டப்பிரிவு 46-ன் அடிப்படையில் பெண்கள் சுரங்கங்களில் வேலை செய்ய தடை இருந்தது. இந்தச் சட்டப்பிரிவு கடந்த பிப்ரவரி மாதம் நீக்கப்பட்டது. 60 ஆண்டுகள் பழமையான இந்தச் சட்டம் பணியிடங்களில் பாலியல் வேற்றுமை கூடாது என்பதை வலியுறுத்த நீக்கப்பட்டது. இரவு நேரப் பணி முதல் சுரங்க வேலை வரை பெண்களும் பணியாற்றலாம் எனத் தெளிவுபடுத்தப்பட்டது.

இதை ஏற்று டாடா ஸ்டீல் நிறுவனம் பெண்களை பணியமர்த்துகிறது. இரவு நேரப் பணி, சுரங்கப் பணி, 24 * 7 நேரப் பணி என அனைத்து வகையான பணியிலும் பெண்கள் இணையலாம் என்றும் கூறியுள்ளது டாடா ஸ்டீல்.

பணியிலிருக்கும் பெண்களுக்குத் தேவைப்படும் அனைத்து வசதிகளையும் நிறுவனம் ஏற்படுத்தித்தர வேண்டும் என்றும் டாடா வலியுறுத்தியுள்ளது.

Watch also:
Published by:Rahini M
First published: