ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டாடா நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்

டாடா நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்

டாடா

டாடா

2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Namakkal, India

  உலக புகழ்பெற்ற டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

  இவ்வேலைவாய்ப்பு முகாமில், 2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

  பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்:  

  நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஓசூர் டாடா நிறுவனம் இனைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறது.

  தேதி மற்றும் இடம்:  வரும் வெள்ளிக்கிழமை (14.10.2022), காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

  அறிஞர் அண்ணா மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லத்துவாடி, நாமக்கல்.

  வேலைவாய்ப்பு விவரங்கள்: 

  பணியிடம்: இளநிலை தொழில் நிபுணர்கள்

  டாடா தொழிச்சாலையின் இடம்: ஓசூர், அருகே தமிழ்நாடு

  படிப்பு:  2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி

  துவக்கநிலை சம்பளம்: மாதாந்திர மொத்த சம்பளம் (CTC) 16,557/- மற்றும் போனஸ்

  உயரம் மற்றும் எடை: 145 செமி, 43 கிலோ (குறைந்தபட்சம்) முதல் 65 கிலோ வரை (அதிகபட்சம்)

  இதையும் வாசிக்கசென்னையில் 40,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் : வேலை பெறுவது எப்படி?

  வேலைவாய்ப்புக்கான அத்தியாவசியப் பயிற்சி: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டு 12 நாள் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த அத்யாவசியப் பயிற்சித் தொகுப்பை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்களுக்கு வேலை வாய்ப்பு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.

  இதையும் வாசிக்க: சென்னையில் 40,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் : வேலை பெறுவது எப்படி?

  மேற்படிப்பிற்கான வாய்ப்புகள்: TEPL நிறுவனத்தில் ஒரு வருட அனுபவத்திற்குப் பிறகு இளநிலை (தயாரிப்பியல்) பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பு

  பணியாளர்க்கான நலத்திட்டங்கள்: நிரந்தர வேலை வாய்ப்பு. வேறு ஒப்பந்தமோ, பத்திரமோ இல்லை

  நம்பிக்கைக்குகந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல்

  தேலையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள்

  ஒழுங்குமுறைச் சட்டங்களுக்குட்பட்ட அனைத்து" நலத்திட்டங்கள் (PF/Gratuity/ESI போன்றவை) வழங்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment