• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Bachelor of Engineering Degree பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    TCS நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. SAP SD Consultant பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வேலைக்கு அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Bachelor of Engineering Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

    TCS நிறுவனமானது, ஆற்றல், தொலைத்தொடர்புகள், நிதிச் சேவைகள், உற்பத்தி, வேதிப் பொருட்கள், பொறியியல், மூலப்பொருட்கள், அரசுத்துறை, சுகாதாரத் துறை ஆகிய அனைத்து துறைகளிலும் ஆர்வம் காட்டிவரும் இந்தியாவின் மிகப்பெரியதும் பழமையானதுமான தொழில் குழுமங்களுள் ஒன்றான டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாகும்

    இது இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள மென்பொருள் சேவைகள் வழங்கும் அறிவுரைச் சேவை நிறுவனமாகும். இது இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்பம் மட்டும் அல்லாமல் வணிகச் செயலாக்க அயலாக்க சேவைகளையும் வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்தியாவின் தேசிய பங்கு மாற்றகத்திலும் மும்பை பங்கு மாற்றகத்திலும் பட்டியலில் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.

    தற்போது இங்கு காலியாக உள்ள SAP SD Consultant பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இதர விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் டாடா ஆலோசனை சேவைகள் Tata Consultancy Service (TCS)
    வேலையின் பெயர் SAP SD Consultant
    காலிப்பணி இடங்கள் Various
    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Bachelor of Engineering Degree பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    பணி அனுபவம் 08 முதல் 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees
    அதிகாரபூர்வ இணையதள முகவரி https://www.tcs.com/
    விண்ணப்பிக்க கடைசி தேதி விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://ibegin.tcs.com/iBegin/jobs/203407J இந்த லிங்கில் சென்று காணவும்.

    TCS நிறுவன வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • முதலில் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்லவும்

    • https://www.tcs.com/ இந்த லிங்கை க்ளிக் செய்து உள்ளே சென்றவுடன் வேலைக்கான அறிவிப்பினை நன்றாக முழுமையாக படிக்கவும்.

    • https://ibegin.tcs.com/iBegin/jobs/203407J பின்னர் விண்ணப்பங்கள் மற்றும் அறிவிப்பில் சான்றிதழ் நகல் ஏதேனும் கேட்க்கப்பட்டிருந்தால் அதனை சேர்த்து இணைத்து ஆன்லைன் வாயிலாக அனுப்ப வேண்டும்.

    • விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன்னர் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

    • விண்ணப்பத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும். இல்லை என்றால் புதிதாக உருவாக்கவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: