Home /News /employment /

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்: உடனே விண்ணப்பியுங்கள்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானியம்: உடனே விண்ணப்பியுங்கள்

மாதிரிபடம்

மாதிரிபடம்

தற்போது நிதிசார் நிறுவனங்களில் குறிப்பிட்டத்தக்கதாக விளங்கும் Ippo Pay நிறுவனத் தலைவர் மோகன் இத்திட்டப் பயனாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ்கத்தில் பதிவு செய்துள்ள அல்லது பதிவு செய்து கொள்ள விரும்பும் ஸ்டார்ட்- அப் நிறுவனங்கன் தமிழக அரசின் TANSEED நிதி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் ஆதார நிதியாக (Seed Grant) வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் TANSEED என்ற மானியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே, மூன்று முறை அறிவிக்கப்பட்டு  கிட்டத்தட்ட 60 நிறுவனங்கள் பலனடைந்துள்ளன. உதாரணமாக, தற்போது நிதிசார் நிறுவனங்களில் குறிப்பிட்டத்தக்கதாக விளங்கும் Ippo Pay நிறுவனத் தலைவர் மோகன் இத்திட்டப் பயனாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது .

    தற்போது, நான்காவது கட்ட TANSEED நிதி உதவி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    அடுப்படை தகுதிகள்:

    புத்தாக்க சிந்தனையோடு இயங்கும் நிறுவனங்கள், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வாய்ப்புள்ள நிறுவனங்கள், சமூகத்தில் நன்மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக இயங்கும் நிறுவனங்கள் ஆகியவை இந்த மானிய நிதிக்காக விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் STARTUPTN மற்றும் STANDUP INDIA -ல் பதிவு செய்திருக்க வேண்டும்.

    தமிழ்நட்டை தலைமையகமாக கொண்டிருக்கின்ற அல்லது தமிழ்நாட்டிற்கு இடம்பெயர தயாராக இருக்கும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நிதியினை பெற விண்ணப்பிக்க இயலாது.

    இதையும் வாசிக்க: தொழில் முனைவோர்க்கு சென்னையில் சிறப்பு முகாம்

    விண்ணப்பம் செய்வது எப்படி? 

    https://startuptn.in/schemes/tanseed-40/ என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்

    முகப்பு பக்கத்தில் TANSEED 4.0 Apply Now என்பதைக் கிளிக் செய்யவும்

    விண்ணப்ப சாளரத்தில் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: TN Govt

    அடுத்த செய்தி