தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

news18
Updated: March 7, 2019, 7:46 PM IST
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
மாதிரிப் படம்
news18
Updated: March 7, 2019, 7:46 PM IST
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) சுமார் 5,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை (மார்ச் 7) இன்று வெளியானது.

இதன்படி, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் கேங்மேன் (Gangman - Trainee) பிரிவில் மாநிலம் முழுவதும் சுமார் 5,000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 2 ஆண்டு பயிற்சிக் காலத்தின்போது மாதம்தோறும் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படும். பின்னர், அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும்.


வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வகுப்பின வாரியாக வயது வரம்பு மாறுபடும்.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழ் தெரிந்தவராக இருத்தல் அவசியம்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் தேர்வுக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.500 செலுத்த வேண்டும்.

Loading...

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் முதலில் உடற் தகுதி சோதனையில் பங்கேற்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்தகட்டமாக எழுத்துத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 22 முதல் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 22. மேலும் விவரங்களுக்கு...   https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf என்ற லிங்க்கை பார்க்கவும்.

Also watch

First published: March 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...