பணி நியமன மோசடி குறித்து உஷார்: தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் எச்சரிக்கை

DS Gopinath | news18
Updated: October 14, 2018, 6:14 PM IST
பணி நியமன மோசடி குறித்து உஷார்: தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் எச்சரிக்கை
மாதிரிப் படம்
DS Gopinath | news18
Updated: October 14, 2018, 6:14 PM IST
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின்பேரில் பணி நியமன மோசடி நடைபெறுவதாகவும், இதுதொடர்பாக பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

மின் உற்பத்தி பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சில தனியார் அமைப்புகளும், ஏஜென்சிகளும், இடைத்தரகர்களும் பொதுமக்களை ஏமாற்றி தமிழ்நாடு மின்சார வாரியத்திலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திலும் நிரந்தர வேலை வாங்கித் தருவதாக வதந்திகள் பரவுவதாகவும், சில நபர்களுக்கு போலியான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம்/தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நியமனம் தொடர்பாக எந்த ஒரு நிறுவனத்தையோ அல்லது ஏஜென்டுகளையோ நியமிக்கவில்லை. மேலும், நேரடி பணி நியமனமானது, எழுத்துத் தேர்வு மற்றும் அசல் சான்றிதழ்களின் சரிபார்ப்பு வழியாக முழு தகுதி அடிப்படையில் மட்டுமே நடைபெறும்.

மேலும், நேரடி பணி நியமனம் தொடர்பான அறிவிக்கை முதல் தேர்வு பட்டியல் வரை அனைத்து தகவல்களும் அவ்வப்போது www.tangedco.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். எனவே, பொதுமக்கள் யாரும் பொய்யான வாக்குறுதிகள், வதந்திகள் மற்றும் ஆணைகளை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
First published: October 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...