ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNTET Paper II Exam : ஆசிரியர் தகுதி தேர்வு II-ம் தாள் தேர்வு தேதி அறிவிப்பு

TNTET Paper II Exam : ஆசிரியர் தகுதி தேர்வு II-ம் தாள் தேர்வு தேதி அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு

ஆசிரியர் தேர்வு

தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு (Admit card) வழங்கும் விவரம் ஜனவரி மூன்றாம் வாரத்தில் அறிவிக்கப்படும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் - II ற்கான கணினி வழித் தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

முன்னதாக, 2022 -ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்- I,II) அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டது. இதற்கான, விண்ணப்பங்கள்   இணையவழி வாயிலாக பெறப்பட்டது. முதல் தாளுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இரண்டாம் தாளுக்கான  தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இம்மாதம் 31ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 12ம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள்-II ற்கு உரிய தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் வாரியம் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும் என்றும், தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு (Admit card) வழங்கும் விவரம் ஜனவரி மூன்றாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Teacher