Home /News /employment /

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் பணி வாய்ப்பு - மீடியா அனுபவம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் பணி வாய்ப்பு - மீடியா அனுபவம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்

அண்ணா நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகம்

பெரியதொரு சீரமைப்பு பணியாக கல்வித் தொலைக்காட்சியை மறுகட்டமைப்பு செய்ய மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (SCERT) முடிவெடுத்துள்ளது.

    தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்வித் தொலைக்காட்சி நிலையத்துக்கு புதிதாக தலைமை செயலக அதிகாரி பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

    சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செயல்பட்டு வரும் கல்வித் தொலைக்காட்சி நிலையம் 1 முதல் 12 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மின்னியப்  பாடப்பொருளை வழங்கி வருகிறது. கொரோனா  தொற்று  முடக்கத்தால் அரசுப் பள்ளிகள் தொடர்ந்து  மூடப்பட்டிருந்த நிலையில், கல்வித் தொலைக்காட்சியின் ஒளிபரப்புகள்  லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பலனளித்தன. கற்றலும் - கற்பித்தலும் இடையே ஒற்றைப் புள்ளி தொடர்பு அமைப்பாக செயல்பட்டது.

    தமிழக அரசு, பாடத்திட்டம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 50 சதவிகிதமும், NEET, JEE போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 10 சதவிகிதமும் மனிதம் வளர்க்கும் நல்லொழுக்கம், மனிதநேய நிலைத்தன்மை, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு 40 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டு நிகழ்ச்சி தயாரிப்பு நடைபெறுகிறது.

    இந்நிலையில், பெரியதொரு சீரமைப்பு பணியாக கல்வித் தொலைக்காட்சியை மறுகட்டமைப்பு செய்ய மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (SCERT) முடிவெடுத்துள்ளது. கற்றலைத் தாண்டி, மாணாக்கர்களுக்குள் பெருமிதத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துவது முக்கியமானதாகும். மின்னியப் பாடப்பொருளை உருவாக்குபவராகவும், உரிமையாளராகவும்  மாணாக்கர்கள் இருக்க வேண்டும். இதனடிப்படையில், கல்வித் தொலைக்காட்சி நிலையத்துக்கு தலைமை நிர்வாக அதிகார என்ற புதிய பதவி உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

    அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் கொண்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இந்த புதிய பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

    தமிழ் புலமை, தொடர்பு திறன், கணினிகளை கையாளும் திறன், நடைமுறைக்கேற்ற அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன், நிர்வாகத்திறன், ஊடகவியல் அல்லது பத்திரிகைத்துறையின் பட்டப்படிப்பு முடித்த 5 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் மிக்க நபர்கள் https://forms.gle/KPvFRsK5JHwf9gd68 என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்விற்கு தகுதியுள்ள நபர்கள் அழைக்கப்படுவார்கள்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Department of School Education

    அடுத்த செய்தி