ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழக ரேஷன் கடை ஊழியர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு

தமிழக ரேஷன் கடை ஊழியர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு

ரேஷன் கடை

ரேஷன் கடை

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

  தமிழகம் முழுவதும் 6503  விற்பனையாளர் மற்றும் உதவியாளர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்காக 2.30 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டதுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அளித்த பேட்டியில், ஆன்லைனில் நடைபெறுவதால் நியாயமான முறையில் பணி நியமனம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

  மேலும், ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறும். ஜனவரி முதல் வாரத்தில் பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  கூட்டுறவுத் துறை மூலமாக ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அமுதம் அங்காடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுவது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.

  Also Read :10 வகுப்பு தேர்ச்சி போதும்... தமிழக ஊர்காவல் படையில் பணி!

  தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 48 ஆயிரத்து 76 விவசாயிகளுக்கு இதுவரை 60 ஆயிரத்து 372 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கால்நடை வளர்ப்புக்கு வட்டி இல்லா கடனாக ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 52 விவசாயிகளுக்கு 770.86 கோடி வழங்கப்பட்டுள்ளதும் என்று தெரிவித்துள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Ration Shop, Tamil Nadu Government Jobs