முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அஞ்சல் துறை வேலை

அஞ்சல் துறை வேலை

post office recruitment 2022: விண்ணப்பத்துடன், வயது சான்றிதழ், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி, ஓட்டுநர் உரிமை, சாதி சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து வரும் 9ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அஞ்சல் துறையின் சென்னை கிரிமிஸ் சாலையில் உள்ள தமிழக அஞ்சல்  ஊர்தி சேவை (Office of the Senior Manager, Mail Motor service) திறன்வாய்ந்த கைவினைக் கலைஞர்களுக்கான (Skilled Artisans) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 07

MV. Mechanic (Skilled )  - 04

M.V. Electrician (Skilled) - 01

Copper & Tinsmith - 01

Upholster (Skilled) -01

சம்பள விவரம்:  ரூ. 19900 முதல் ரூ. 63200 வரை (ஊதிய நிலை 2)

வயது வரம்பு:  இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2022 அன்று 18 -30-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

இதையும் வாசிக்க: மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் ஆசிரியர் பணி.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

கல்வித் தகுதி: 

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து தொடர்புடையை  துறைகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

(அல்லது)

8ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய துறைகளில்  ஓர் ஆண்டு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

மேலும், MV. Mechanic பணிக்கு விண்ணப்பிக்கு விரும்புவோர் கட்டாயம் ஓட்டுநர் உரிமை வைத்திருக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: ரேஷன் கடை ஊழியர்கள் நியமனம் : நடைமுறைகள் என்ன? நிபந்தனைகளை என்ன?

தெரிவு முறை: தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள், தொழிற் முறை தேர்வுக்கு  (Competitive Trade Test) அழைக்கப்படுவர்.

விண்ணப்பம் செய்வது எப்படி?  indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பத்துடன், வயது சான்றிதழ், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி, ஓட்டுநர் உரிமை, சாதி சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, எண்.37, கிரீம்ஸ் சாலை, சென்னை - 600 006 என்ற முகவரிக்கு வரும் ஜனவரி மாதம் 9ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.  

Department of Post Recruitment : No.MSE/B9-4/XII/2022

First published:

Tags: Central Government Jobs