TNUSRB Hall Ticket For SI Released | போலீஸ் எஸ்.ஐ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

TN Police SI Exam Hall Ticket | "எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு உடற்தகுதி தேர்வு ஜனவரி இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன"

TNUSRB Hall Ticket For SI Released | போலீஸ் எஸ்.ஐ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: December 30, 2019, 2:55 PM IST
  • Share this:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் எஸ்.ஐ பணிக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் காவலர், எஸ்.ஐ போன்ற நேரடி பணி நியமனங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், காவல் துறையில் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்காக அறிவிப்பை சீருடைப் பணியார் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. ஆன்லைன் மூலம் இதற்காக பல பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர்.




இவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 12-ம் தேதி நடக்க இருக்கிறது. மேலும், காவலர்களாக இருந்து இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 11-ம் தேதி நடக்க இருக்கிறது.

எழுத்துத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் இந்த இணையதளத்தில் சென்று யூசர் ஐடி எண் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு உடற்தகுதி தேர்வு ஜனவரி இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
First published: December 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்