Home /News /employment /

கன்னியாகுமாரி மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

கன்னியாகுமாரி மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

 அலுவலக உதவியாளர் பணி

அலுவலக உதவியாளர் பணி

விண்ணப்பிக்க விரும்புவோர் 18.07.2022-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆணையாளர், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், புதுக்கடை அஞ்சல் 629171 கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்டம் , முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை இனசுழற்சி முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களை www.kanniyakumari.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பிக்க விரும்புவோர் 18.07.2022-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆணையாளர், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், புதுக்கடை அஞ்சல் 629171 கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.



























    அலுவலக உதவியாளர் (மொத்த பணியிடங்கள் 3)இரவு காவலர் (மொத்த பணியிடங்கள் - 1)
    இனச்சுழற்சி முறைஇனச்சுழற்சி முறை
    SC(A) (W (DW)) ஆதிதிராவிடர் (அருந்ததியர்) (பெண் (ஆதரவற்ற விதவை)) - 1SC(A) (W (DW)) ஆதிதிராவிடர் (அருந்ததியர்) (பெண் (ஆதரவற்ற விதவை)) - 1
    MBC&DNC மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - 01-
    BC (Other than Muslim) பிற்படுத்தப்பட்ட இனத்தவர் (முஸ்லிம்கள் தவிர)  - 01-
    மொத்தம் - 03மொத்தம் - 01

    நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் வைத்து நடைபெறவுள்ள நேர்காணல் விபரம் பதிவஞ்சல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.

    நிபந்தனைகள்:

    1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

    2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

    3. விண்ணப்பபடிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

    4. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    5. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் ஆணையாளர், முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது ஆணையாளர், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், புதுக்கடை அஞ்சல் 629171 கன்னியாகுமரி மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 18.07.2022 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும். 18/07/2022ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும்படி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

    வேலைக்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பெற

    https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2022/06/2022062435.pdf

    மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment news, Job Vacancy, Kanyakumari

    அடுத்த செய்தி