Job Alert : ரூ. 56,900/- சம்பளம் - தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க 14ம் தேதி கடைசி நாள்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் லிமிடெட்

தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து 14.09.2021 வரை இணையத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Share this:
    தமிழ்நாடு அரசு நிறுவனமும் மற்றும் இந்தியாவின் முதன்மையான மாநில அளவிலான நிதி நிறுவனமுமான தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் லிமிடெட் நிறுவனத்தில் பின்வரும் பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து 15.08.2021 முதல் 14.09.2021 வரை இணையத்தளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் : 





























    பதவியின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை
    மேலாளர் (நிதி ) 4
    மேலாளர் (சட்டம் ) 2
    முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம் ) 8


     

    முதுநிலை அலுவலர் (நிதி)
    27
    முதுநிலை அலுவலர் (சட்டம் ) 9




























    பதவியின் பெயர் சம்பள விவரம்
    மேலாளர் (நிதி ) ரூ. 56,900 – 1,80,500/-
    மேலாளர் (சட்டம் ) ரூ. 56,900 – 1,80,500/-
    முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம் ) ரூ. 56,100 – 1,77,500/-
    முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம் ) ரூ. 56,100 – 1,77,500/-
    முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம் ) ரூ. 56,100 – 1,77,500/-

    இந்த நேரடி நியமனத்திற்கு இட ஒதுக்கீடு விதிகள் பொருந்தும். அதன்படி பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய காலியிடங்கள் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

    மேற்படி நேரடி நியமனம் சம்பந்தப்பட்ட பொதுவான தகவல்கள்,கல்வித் தகுதி , தேவையான அனுபவம் , விண்ணப்பக்கட்டணம் , பிற தகுதிகளுக்கான அளவுகோல், தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு மையம் விண்ணப்பத்தை இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் இதர தகவல்களுக்கு www.tiic.org என்ற இணையதளத்தை பார்வை இடவும்.

    இணையதளம் மூலம் நடைபெறும் தேர்வுக்கான நாள்,நேரம் மற்றும் இடம் பற்றிய தகவல்கள் தேர்வு கூட அனுமதி சீட்டு மூலம் தெரிவிக்கப்படும்.

     

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: