Home /News /employment /

பகுதி நேர பெண் தூய்மை பணியாளர் பணி... தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பகுதி நேர பெண் தூய்மை பணியாளர் பணி... தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 தூய்மைபணியாளர் பணி

தூய்மைபணியாளர் பணி

விண்ணப்பத்துடன் ரூ.25/-க்கான அஞ்சலக வில்லையினை ஒட்டிய உள்ளுறையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்பட்டுவரும் கல்வி விடுதியில் காலியாக உள்ள பகுதி நேர பெண் தூய்மைபணியாளர் (தொகுப்பூதியம் ) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர பெண் தூய்மை பணியாளர் (தொகுப்புதியம் மாதம்g ரூ3,000-ம் மட்டும்) பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனசுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

    அரசு விதிகளின் படி முன்னுரிமை பெற்றவர் மற்றும் முன்னுரிமை பெறாதவர் அடிப்படையில் நிரப்படவுள்ளது. இனசுழற்சி முறையில் முன்னுரிமை பெற்றவர்களில் GT-1, SCA - 1, MBC -1, BC -1, SC-1, ஐந்து நபர்களும் முன்னுரிமை பெறாதவர்களில் GT-1,MBC 1, மூன்று நபர்களும் தூய்மை பணியாளர்கள் காலிபணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்காக பின்வரும் தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 11-07-2022 (5 மணி வரையிலும்) வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    வயது வரம்பு : 01-07-2022 தேதியன்று SC/ST-18 முதல் 37,

    BC,BC(Muslim), MBC&DNC-18முதல் 34

    இதர பிரிவினர் 18 முதல் 32 மிகாமலும் இருக்க வேண்டும்.

    அரசு விதி முறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். தகுதியுடைய நபர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஒட்டி அதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 3ம் தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 11-07-2022 திங்கள் கிழமை அன்று மாலை 5.00 மணிக்குள் கிடைக்கும்படி செய்ய வேண்டும். இப்பணிக்கான விண்ணப்பத்தினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக இணையதள முகவரியில் www.mayiladuthurai.nic.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் விண்ணப்பத்துடன் ரூ.25/-க்கான அஞ்சலக வில்லையினை ஒட்டிய உள்ளுறையுடன் விண்ணப்பிக்க வேண்டும். காலதாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்தால் அழைப்பாணை திரும்ப பெறப்படும். விண்ணப்பங்கள் ஆகியவற்றினை அரசு பரீசிலிக்க இயலாது எனவும், அதற்கு மனுதாரரே முழு பொறுப்பு எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடையவர்கள் மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் பகுதி நேர பெண் தூய்மைபணியாளர் (தொகுப்பூதியம்) பணியிடத்திற்க்கு விண்ணப்பம் செய்யலாம் என மாவட்டஆட்சியர் தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி