இந்தி தெரிந்தவரா நீங்கள்? தமிழக அரசில் வேலைவாய்ப்பு

Government Job Alert |

இந்தி தெரிந்தவரா நீங்கள்? தமிழக அரசில் வேலைவாய்ப்பு
Govt Jobs
  • News18
  • Last Updated: November 23, 2019, 6:30 PM IST
  • Share this:
தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவில் உதவி செக்‌ஷன் அதிகாரி பணியிடங்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவில் 5 உதவி செக்‌ஷன் அதிகாரி பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யக்கூடியவர்கள் 4 பணியிடங்களிலும், தமிழ், ஆங்கிலத்தில் இருந்து இந்தியிலும், இந்தியில் இருந்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யக் கூடியவர்கள் 1 பணியிடத்திலும் நியமிக்கப்பட உள்ளனர்.


இந்தப் பணிக்கு Rs.36,400-1,15,700 விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் - ஆங்கிலம் மொழிபெயர்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் தமிழை பாடமாக கொண்டு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் - ஆங்கிலம் - இந்தி மொழிபெயர்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் இந்தியை பாடமாக கொண்டு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 8-ம் தேதி கடைசி தேதியாகும்.

மொழித்தாள் மற்றும் பொது அறிவு கேள்விகள் என்று இரண்டு தேர்வுகளை விண்ணப்பிக்க இருப்பவர்கள் அடுத்தாண்டு ஜனவரி 11-ம் தேதி எழுத வேண்டும்.

தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட பிற விபரங்களை தெரிந்துகொள்ள கீழே இருக்கும் லிங்க்-ஐ கிளிக் செய்க...

http://www.tnpsc.gov.in/Notifications/2019_31_notyfn_ASOTrans.pdf

www.tnpsc.gov.in என்ற தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள கிளிக் செய்க...

 

 
First published: November 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading