• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

ஆன்லைன் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் 0475 233381 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். என திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருந்தார்.

  • Share this:
    திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், கடந்த 1ம் தேதி முதல் இலவச டி.என்.பி.எஸ்.சி சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து முன்னதாக திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது தமிழ்நாடு அரசுபணி யாளர் தேர்வாணயம் ( டி.என்.பி.எஸ்.சி ) குரூப் 2 மற்றும் குரூப் - 4 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வை விரைவில் நடத்த இருக்கிறது . அதையொட்டி , திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் , வரும் 1ம் தேதி முதல் இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்குகிறது .

    திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நேரடி வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் . இணையவழி வகுப்புகள் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனி ஆசிரி யர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வு கள் நடத்தப்படும். கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் ஆன்லைன் மூலம் மட்டுமே பயிற்சி வகுப்பு நடந்தது .



    தற்போது, மீண்டும் நேரடி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே , போட்டித் தேர்வுக்கு தயாராகும் விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 1 ம் தேதி முதல் பயற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். ஆன்லைன் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் 0475 233381 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் . இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: