திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்தை சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை, தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக ஆறு மாதங்களுக்கு மட்டுமே நிரப்பப்படவுள்ளதால் கீழ்கண்ட தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணி நிரந்தரம் செய்யத்தக்க தல்ல மற்றும் வரன்முறை செய்ய இயலாதது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்
மருந்தாளுனர்
கல்வி தகுதி
D.Pharm அல்லது B.Pharm
வயது
18 வயதுக்கு மேல்
நேரிலோ அல்லது பதிவஞ்சலியோ விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், நகராட்சி அலுவலகம் அருகில் , சேர்மன் லட்சுமணன் தெரு , திருப்பத்தூர் - 635 601, வேலூர் மாவட்டம்
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்
31.07.2021
மேல்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது கீழ்காணும் ஆவணங்கள் தவறாமல் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி இருக்க வேண்டும்.
முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்
கல்வித் தகுதிக்கான சான்றின் நகல் (மாற்று சான்று /மதிப்பெண் சான்று )
பிறந்த தேதிக்கான சான்றின் நகல்
சாதிச் சான்றின் நகல்
இருப்பிடச் சான்றின் நகல் (குடும்ப அட்டை /வாக்காளர் அட்டை )
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.