ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை - எப்படி விண்ணப்பிப்பது?

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை - எப்படி விண்ணப்பிப்பது?

வேலை

வேலை

திருவாரூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ்நாடு அரசு சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் சமூகப்பணியாளர் மற்றும் குழந்தைகள் நலக்குழு அலுவலகத்திற்கு உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் ஆகிய பதவிகளுக்கு தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பதவிகளுக்கான விண்ணப்ப படிவத்தை இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை உரிய கல்வி சான்றுகளை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் 311, 3-வது தளம், மாவட்ட ஆட்சியர், அலுவலக இணைப்பு கட்டிடம், திருவாரூர் - 610 004 என்ற முகவரிக்கு 24.06.2022 ம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் tiruvarur.nic.in என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் / துறைDistrict Child Protection Unit Tiruvarur (DCPU Tiruvarur) – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு திருவாரூர் (டிசிபியு திருவாரூர்)
காலியாக உள்ள வேலையின் பெயர்Social Worker, Assistant and Data Entry Operator
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி05/06/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி24/06/2022
சம்பள விவரம்Rs.9,000 – 14,000/- Per Month
கல்வித் தகுதி விவரம்10th, Degree, Graduation, Post Graduation
பணியிடம்திருவாரூர் , தமிழ்நாடு
வயது தகுதி40 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
மொத்த காலிப்பணியிட விவரம்02 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறைOFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள tiruvarur.nic.in இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://jobstamil.in/wp-content/uploads/2022/06/DCPU-Tiruvarur-Social-Worker-Assistant-and-Data-Entry-Operator-Posts-Notification-And-Application-Form.pdf

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

First published:

Tags: Job Vacancy