ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீஷியன் பணி... தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீஷியன் பணி... தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

எலக்ட்ரீஷியன் பணி

எலக்ட்ரீஷியன் பணி

திண்டுக்கல் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஒப்பந்தப் பயிற்றுநர் (Electrician) பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திண்டுக்கல் நத்தம் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், ஒப்பந்தப் பயிற்றுநர் (Electrician) பணிக்கு (Temporary) பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இந்த பணியில் ஒப்பந்த பயிற்றுநராக பணிபுரிய விரும்புவோர் Diploma in Electrical and Electronics Engineering தொழில்நுட்ப கல்வித்தகுதி (அல்லது) NTC in Electrician Trade (with 3 years Industrial Experience) / அல்லது NAC in Electrician (with 2 years Industrial Experience) கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இந்த காலி பணியிடத்திற்கு 01.07.2022 அன்று 18 முதல் 32 வயதுக்குட்பட்ட MBC &DNC Priority (முன்னுரிமை பெற்றவர்கள்) இனத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தொகுப்பூதியமாக பிரதி மாதம் ரூ.20,000- மட்டும் வழங்கப்படும்.

இதற்கு அனைத்து கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் நகல்களுடன், ‘முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், குள்ளனம்பட்டி, நத்தம் ரோடு, திண்டுக்கல்’ என்ற முகவரிக்கு வருகின்ற 15-07-2022-க்குள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Employment, Job Vacancy