ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழக அரசு சார்பில் தங்கும் வசதி, தரமான உணவுடன் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்- விண்ணப்பிப்பது எப்படி?

தமிழக அரசு சார்பில் தங்கும் வசதி, தரமான உணவுடன் யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்- விண்ணப்பிப்பது எப்படி?

காட்சிப் படம்

காட்சிப் படம்

இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  All India Civil Services Coaching Centre:  2023ம் ஆண்டு நடைபெறவுள்ள  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணித் தேர்விற்கு கட்டணமில்லாப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது, இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வனத்துறை பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய பாதுகாப்புப் பணி உள்ளிட்ட மத்தியப் பணிகளுக்கு  குடிமைப் பணி (Civil Service Examination) தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆள்சேர்க்கை தெரிவு முறையானது  முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலையைக் கொண்டுள்ளது.

  அந்த வகையில்,  2023ம் ஆண்டுக்கான குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வு  வரும் மே மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு சென்னையில் உள்ள அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம், கோயம்பத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள மையங்களில் கட்டணமில்லா பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில்,  2023ம் ஆண்டு முதல்நிலை பயிற்சித் திட்டத்தை  பயிற்சித் துறை தலைவர் அறிவித்துள்ளார். அதில், "சென்னை அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் கட்டணமில்லாமல் தங்கும் வசதி, உணவு, தரமான நூலகம். காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது.

  இப்பயிற்சி மையம் 225 முழுநேரத் தேர்வர்களையும், 100 பகுதிநேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது. அதே போன்று, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தகா 100 முழுநேரத் தேர்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன.

  இதையும் வாசிக்க: 900 அறிவியல் உதவியாளர் பணி: எஸ்எஸ்சி தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

  2023-ஆம் ஆண்டில் மத்தியக் தேர்வாணையக்குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக 07.10.2022 முதல் 27.10.2022 வரை விண்ண ப்பிக்கலாம்.

  இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும், விண்ணப்பிக்கும்பட்சத்தில் அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது.

  இதையும் வாசிக்க: யுபிஎஸ்சி தேர்வாணையத்தின் புதிய செயலி அறிமுகம்! - தேர்வு அறிவிப்பு முதல் முடிவுகள் வரை அனைத்தும் இனி ஒரே இடத்தில்..!

  மேலும், பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை மத்திய தேர்வாணையக் குழுவின் இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தகுதியுடைய நபர்கள் 13.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

  முதல்நிலைத் தேர்வு பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்படும் மாணவ/மாணவியர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பயிற்சி மையங்களில் இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். 2022, டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Exam, UPSC