Home /News /employment /

சாகர் மித்ரா பணிக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி நாள்: எப்படி விண்ணப்பிப்பது?

சாகர் மித்ரா பணிக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி நாள்: எப்படி விண்ணப்பிப்பது?

சாகர் மித்ரா

சாகர் மித்ரா

விண்ணப்பத்தினை "தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை' அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

  • News18 India
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai | Thoothukkudi
    தமிழ்நாடு மீன்வம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவித்துள்ள சாகர் மித்ரா (SAGAR MITRAS) பணிக்கு விண்ணப்பித்திட நாளை மறுநாள் கடைசி நாளாகும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    நிபந்தனைகள்: தமிழக கடலோர கிராமங்களில் வாழும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இது முற்றிலும், ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். ஒரு வருடத்திற்கு பணிபுரிய அழைக்கப்படுவார்கள்.

    மீன்வள அறிவியல்/கடல் உயிரியல்/விலங்கியல் ஆகிய பாட நெறிகளில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேற்கூறிய பாடநெறிகளில் விண்ணப்பங்கள் நிரப்ப முடியாத சூழலில், வேதியியல்/ தாவரவியல்/ உயிர் வேதியியல்/ நுண்ணுயிரியல்/ இயற்பியல் பாடநெறி விண்ணப்பதாரர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

    கடலோர மாவட்டங்கள்:  கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் (வடக்கு,தெற்கு, மண்டபம், ராமேஸ்வரம்), புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை,  திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை   ஆகிய கடலோர மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    தொகுப்பூதியமாக மாதம் ரூ.15,000:- தரப்படும்.

    விண்ணப்பம் செய்வது எப்படி? 

    விண்ணப்பத்தினை "தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை' அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.



    விண்ணப்ப படிவத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்தி, சுய சான்றொப்பத்துடன்  சம்மந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வள நலத்துறை உதவி ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபங்கள் ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் கிடைக்க செய்ய வேண்டும்.

    விண்ணப்பப்   படிவம்: PMMSY- ENGAGEMENT OF SAGAR MITRAS

    இதையும் வாசிக்க: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு - முக்கிய அறிவிப்பு

    சாகர் மித்ரா: நாட்டின் மீன் உற்பத்தியை 2024-25க்குள் அதை 220 லட்சம் டன்களாக அதிகரிக்க பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா தொடங்கப்பட்டது. உள்ளூர் மீனவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது; அரசுக்கும், உள்ளூர் மீனவர்களுக்கு இடையே தொடர்பு பாலமாக செயல்படுவது; மீன் வளர்ப்பு விவசாயிகள் அமைப்புகளை உருவாக்க முனைவது; வானிலை எச்சரிக்கை, இயற்கை சீரிடர் தொடர்பான தகவல்களை கொண்டு சேர்ப்பது ஆகியவைகல் சாகர் மித்ராக்களின் முக்கிய கடமையாகும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Government jobs

    அடுத்த செய்தி