தமிழக அரசுக்கு உதவுவதற்காக இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கான அரசாணை கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதன்படி தமிழக இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்கப்பட்டு தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகத்தில் தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.
இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதலமைச்சரின் இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக http://www.bim.edu/Tncmpfஎனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 10ம் தேதி என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
எத்தனை நபர்கள் வேலைக்கு எடுக்க உள்ளனர்
30
பணி காலம்
2 ஆண்டுகள்
சம்பள விவரம்
ரூ.65,000 + ரூ.10,000 (Additional Allowance)
வயது
22-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
BC/MBC – 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SC/ST – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு, Computer Based Test மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பணியிடம்
தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் பணியில் அமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
25/05/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி
10/06/2022
இத்திட்டத்திற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.