வரும் ஆண்டில் மத்திய/மாநில அரசுத் துறையில் காலியாக உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. அதே சமயத்தில், போட்டித் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி வகுப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சென்னை, கோயம்பத்தூர், மதுரை ஆகிய பெருநகரங்களில் தடுக்கி விழுந்தால் தனியார் பயிற்சி வகுப்புகள் இருக்கும் நிலை உருவாகி வருகிறது.
இந்த பயிற்சி நிறுவனங்கள் கட்டணங்களை முறைப்படுத்த எந்த விதிமுறையும் இல்லை. தவறான விளம்பரங்கள் மூலம் லாபம் அடைவதை சில பயிற்சி நிறுவனங்கள் நோக்கமாக கொண்டுள்ளன. எனவே, தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு செல்லமால், மத்திய/மாநில அரசுத் துறைக்கு தயாராகி வரும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை நிர்வகித்து வரும் tamilnaducareerservices.tn.gov.in என்ற தளத்தில் சேரலாம்.
இதையும் வாசிக்க: TNPSC குரூப் 4 தேர்வர்களே... களநிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்
போட்டித் தேர்வுகளுக்கான கற்றல் வலைதளம்:
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையானது அரசு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு உதவும் நோக்கில் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய வழியிலான மெய்நிகர் கற்றல் வலைதளம் செயல்படுத்தி வருகிறது.
ஆன்லைன் முறையில் TNPSC (Group I, Group II, Group IV and Group VIIB/VIII) TNUSRPB, UPSC, SSC, AIRFORCE, IBPS, RRB போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான படிப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.
யார் வேண்டுமானாலும் எங்கும், எந்த நேரத்திலும் கற்கக்கூடிய சாத்தியம் உள்ளன. பாடத் திட்டங்கள் (Exam Wise Syllabus), TNPSC தேர்வுகளின் முந்தைய ஆண்டு வினாத்தாட்கள், மாதிரி தேர்வு( Mock Test ), பாட நூல்கள் NCERT, TNPSC புத்தகங்கள்) முற்றிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சிறப்பம்சங்கள் :
கிராமப் பகுதிகளில் வசிக்கும் போட்டித்தேர்வுகளை மேற்கொள்ளும் இளைஞர்களின் தேவை அறிந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அனைத்து தேர்வுகளுக்கான (TNPSC, SSC, RRB,IBPS) பாடக்குறிப்புகளும் இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
மேலும், இம்மென்பாடக்குறிப்புகள் ஆஃப்லைன் முறையிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்விணையதளத்தில், மாணவர்கள் மாதிரி தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுகளை மேற்கொண்டு பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் தினந்தோறும் எடுக்கப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத தொலைதூரத்தில் உள்ள இளைஞர்கள் பயனடையும் வகையில் பயிற்சி வகுப்புகளுக்கான காணொலி பாடக் குறிப்புகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
இதுமட்டுமின்றி பதிவு செய்துள்ளவர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்படும் விளம்பரப்படுத்தப்பட்ட காலிப்பணியிடங்கள், தேர்வு அறிவிக்கைகள் மற்றும் தொழில் தகவல்கள் ஆகியவை சரியான நேரத்தில் தெரிவிக்கப்படுகின்றன.
அலைபேசி வழியாக படிக்கும் பயனர்களின் வசதிக்காக இவ்விணையதளத்தில் அலைபேசி செயலியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: தேர்வு இல்லை...நேர்காணல் மட்டுமே... திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு!
பதிவு செய்வது எப்படி?
இத்தளத்தில் உள்ள பாடக்குறிப்புகளைப் பயன்படுத்துவதற்கு பதிவு மேற்கொள்ளல் அவசியம். tamilnaducareerservices.tn.gov.in தளத்தின் முகப்புப்பக்கத்தில் உள்ள Register as a candidate என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
தனிப்பட்ட விவரங்கள், அடையாள விவரங்கள், தொடர்பு விபரங்கள், கல்வி விவரங்கள், பயனர்பெயர், கடவுச்சொல் ஆகிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு, இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.