சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனைக் கண்காட்சி நேற்று முதல் தொடங்கியது. இந்த கண்காட்சி வரும் 10ம் தேதி வரும் நடைபெறும் என்றும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த தரமான பொருட்களை வாங்கி பயனடையுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களும் கலந்து கொண்டுள்ளன. இக்கண்காட்சியில், அரியலூர் கிரிஸ்டல் மணி மாலைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், கடலூர் முந்திரிப் பருப்பு, தருமபுரி சிறுதானிய தின்பண்டங்கள், ஈரோடு தரை விரிப்புகள், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், கன்னியாகுமரி வாழைநார் பொருட்கள், நாமக்கல் கொல்லிமலை அரபுளி காபித்தூள், கரூர் கைத்தறி துண்டுகள், சிவகங்கை பாரம்பரிய சத்துமாவு, திருவண்ணாமலை ஜவ்வாது மலை தேன், தூத்துக்குடி பனை பொருட்கள், விழுப்புரம் சுடுமண் சிற்பங்கள், விருதுநகர் செட்டிநாடு புடவைகள், கோயமுத்தூர் மூலிகை சோப்புகள், திண்டுக்கல் சின்னாளப்பட்டி சேலைகள், திருச்சி செயற்கை ஆபரணங்கள், தேனி சானிடரி நாப்கின் மற்றும் திருநெல்வேலி அல்வா போன்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்கள், திருநங்கையர் சுய உதவிக் குழுக்களும் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளனர்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத துணிப்பைகள், மஞ்சப்பைகள் விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய சுவை மிகுந்த உணவுகளை உண்டு களித்திட உணவு அரங்கம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சி, ஜனவரி 10ம் தேதி வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இந்தக் கண்காட்சியை அனைவரும் கண்டுகளித்து, மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட வேண்டும் என தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.