Home /News /employment /

2ம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

2ம் நிலை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnusrb tn.gav.in மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    2ம் நிலை காவலர் பணியடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று நள்ளிரவு 11.59 மணியுடன் நிறைவடைகிறது.எனவே, விண்ணப்பதாரர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    மொத்த காலியிடங்கள்: 3552



    கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று, 18 வயது நிறைவுற்றவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு:






























    பிரிவுஉச்ச வயது வரம்பு
    பொதுப் பிரிவு26 வயது
    பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்28 வயது
    ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர்31 வயது
    திருநங்கைகள்31 வயது
    ஆதரவற்ற விதவைகள்37 வயது
    முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள்

    தேர்வுக் கட்டணம் : ரூ 250/-

    விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம்.

    இதையும் வாசிக்க:  3,552 காவலர் பணியிடங்கள்: மகப்பேறு கால பெண்கள் விண்ணப்பிக்கலாமா?

    தெரிவு செய்யப்படும் முறை: 






























    நிலைகள்மதிப்பெண்கள்
    1முதன்மை எழுத்துத் தேர்வு70 மதிப்பெண்கள்
    2உடல்திறன் போட்டிகள்24 மதிப்பெண்கள்
    3சிறப்பு மதிப்பெண்கள் (NCC,NSS,விளையாட்டு வீரர்)6 மதிப்பெண்கள்
    மொத்தம்100 மதிப்பெண்கள்


    விண்ணப்பம் செய்வது எப்படி:

    விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnusrb tn.gav.in மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஏனைய இதர வழிகளில் விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Government jobs, Tamilnadu police

    அடுத்த செய்தி