TET Exam Admit Card: 2022 ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டன. மேலும், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களின் விவரங்களும் வெளியாகியுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களது பயணர் எண் மற்றும் கடவுச் சொல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் 14 முதல் 20 வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக கணினி வழியில் தேர்வுகள் நடத்தவுள்ளதாக தெரிவித்தது.
இந்நிலையில், கணினி வழி நடத்தப்படும் தாள்-I தேர்விற்கான கால அட்டவணையை தேர்வு வாரியம் வெளியிட்டது.
தேர்வு நடைபெறும் தேதி | அனுமதிச் சீட்டு - 1District Admit Card | அனுமதிச் சீட்டு -2Venue Admit Card |
---|---|---|
14.10.2022 | 07.10.2022 | 11.10.2022 |
15.10.2022 | 07.10.2022 | 12.10.2022 |
16.10.2022 | 07.10.2022 | 13.10.2022 |
17.10.2022 | 07.10.2022 | 14.10.2022 |
18.10.2022 | 07.10.2022 | 15.10.2022 |
19.10.2022 | 07.10.2022 | 16.10.2022 |
மேலும், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட அனுமதிச் சீட்டு 1- ஐ (District Admit Card-I) வெளியிடப்பட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதே சமயம், தேர்வு மையம் (இடம்) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு-2 (Venue - Admit Card-II) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: தமிழகத்தில் 2,748 கிராம உதவியாளர் பணி.. ரூ.35,000 வரை சம்பளம்.. உங்களுக்கு செட் ஆகுமா?
மேலும், இந்தாண்டு கணினிவழித் தேர்வாக (Computer Based Examination) நடத்தப்படுவதால், பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அதன்படி வரும் 12ம் தேதி முதல் trbpracticetest என்ற போர்ட்டலில் பயிற்சித் தேர்வை தேர்வர்கள் மேற்கொள்ளலாம்.
இதையும் வாசிக்க: எஸ்.எஸ்.சி தேர்வுக்கான காலக்கெடு நீட்டிப்பு: உடனே விண்ணப்பியுங்கள்!
தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை மாற்றுவது தொடர்பாக எந்த கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.