முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / TNTET Exam Recruitment: 2023ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? முக்கிய அறிவிப்பு இதோ

TNTET Exam Recruitment: 2023ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? முக்கிய அறிவிப்பு இதோ

காட்சிப் படம்

காட்சிப் படம்

TNTET Exam 2023: 2022ம் ஆண்டு, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - Iற் கான தேர்வு மட்டும் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I & II  தேர்வு குறித்த அறிவிப்பு 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு 2024ல் மார்ச் மாதம் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாடு ஆசிரயர் தேர்வு வாரியம் 2023ம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணையை வெளியிட்டது. இந்த அட்டவணையின் படி, 2023ல் 4000 உதவி பேராசிரியர்கள், 6553 இடைநிலை ஆசிரியர்கள், 3,587 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 15149 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: 

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இந்த தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (ஆசிரியர் பயிற்சி, பட்டயப் படிப்பு முடித்தவர்கள் மட்டும்) முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (கல்வியியல் பட்டம் பெற்றவர்கள்) இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (ஆசிரியர் பயிற்சி, பட்டயப் படிப்பு) மற்றும் கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் என இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள்) இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.

 2023 ஆசிரியர் தகுதித் தேர்வு:

தமிழ்நாட்டில், முன்னதாக  2013, 2017, 2019 என முந்தைய 3 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு, வெளியிடப்பட்ட தேர்வு திட்ட அட்டவணையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆகஸ்ட்/செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தாள் - Iற் கான தேர்வு மட்டும் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தாள்- II ற்கான தேர்வு குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

கணினி வழி தேர்வாக நடைபெற்ற தாள் -I ல் 1,53,233 பேர் பங்கேற்றனர். அதில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி  பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது, தேர்வெழுதியவர்களில் வெறும் 14% பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I & II குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு டிசமபர் மாதம் வெளிவரும் என்றும்  அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்றும் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்வு அட்டவணையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: TRB : 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு... 15,000 காலி பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

First published:

Tags: Govt teachers, TRB