ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரேஷன் கடை நேர்முகத் தேர்வு.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ரேஷன் கடை நேர்முகத் தேர்வு.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

ரேஷன் கடை

ரேஷன் கடை

இதுவரை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள்,  தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரி (Email ID) மூலம் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

Tamilnadu Ration Shop Recruitment 2022: மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (packer) பதவிகளுக்கான  நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றன.

அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறை நிலையங்கள் , நேர்காணல் தேதியை அறிவித்துள்ளன.  திருவள்ளூர், கோயம்பத்தூர், சேலம், மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வருகின்றன.  இம்மாத இறுதி வரை நேர்முகத் தேர்வு தொடர்ந்து  நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதுவரை அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யாதவர்கள்,  தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரி (Email ID) மூலம் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வு மையம், நேர்காணல் குழு எண், நேர்முகத் தேர்வு நாள்/நேரம் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்ட நாளில், முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். பிறந்த தேதிக்கான சான்றிதழ் (SSLC/HSC Marksheet), கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், விண்ணப்பத்தில் உள்ளது போன்று 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தற்போது, வேலைபார்க்கும் நிறுவனத்திடம் இருந்து தடையின்மை சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

இதையும் படிங்க :  மாதம் ரூ.80,000 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி

கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வில் அளிக்கப்பட்ட சராசரி மதிப்பெண்கள் முறையே 50:50 என்ற விகிதத்தில்  தெரிவு முறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களில்  தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்படும். மேலும்,  மாற்றுத்திறனாளிகள், தமிழ் வழியில் பயின்றோருக்கு, முன்னாள் ராணுவத்தினருக்கு, திருநங்கை ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இறுதியாக  தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல் அந்தந்த மாவட்ட கூட்டுறவு வேலைவாய்ப்பு நிலையத்தில் வெளியிடப்படும். தெரிவு பட்டியல் குறித்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். முடிவுகள் அறிவிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் உரிய காரணங்களுடன் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த பதவிக்கு நீங்கள் விண்ணப்பித்திருந்தால், உடனடியாக தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து, நேர்முகத் தேர்ல் கலந்து கொள்ளுங்கள்.

First published:

Tags: Job Vacancy, Local News, Tamil Nadu Government Jobs, Tamil News