ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரேஷன் கடை வேலை.. நேர்முகத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?

ரேஷன் கடை வேலை.. நேர்முகத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?

காட்சிப் படம்

காட்சிப் படம்

Ration shop interview call letter : நேர்முகத்தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள், மின்னஞ்சல்(E-Mail)/ குறுஞ்செய்தி (SMS) மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும்  நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு  நேர்காணல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் (Admit Card ) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆட்சேர்ப்பு அலுவலக (District Recruitment Bureau -Cooperative Department) இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த பதவிகளுக்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், வகுப்புதாரர் சார்ந்துள்ள இனசுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம்,இடம் நாள் ஆகிய விவரங்கள் ஹால் டிக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் இல்லாத விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றுதெரிவிக்கப்பட்டுளளது.

ஹால் டிக்கெட் -ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி? 

Packers and salesmen Recruitment : How to download Admit card 

 மாவட்டம்பணியிடங்கள்District Recruitment Bureau- 2022 (Cooperative Department - District wise)
1கோயம்புத்தூர்233https://www.drbcbe.in/
2விழுப்புரம்244https://www.drbvpm.in/
3விருதுநகர்164https://www.vnrdrb.net/
4புதுக்கோட்டை135https://www.drbpdk.in/
5நாமக்கல்200https://www.drbnamakkal.net/
6செங்கல்பட்டு178https://www.drbcgl.in/
7ஈரோடு243https://www.drberd.in/
8திருச்சி231https://www.drbtry.in/
9மதுரை164https://drbmadurai.net/
10ராணிப்பேட்டை118https://www.drbrpt.in/
11திருவண்ணாமலை376http://drbtvmalai.net/
12அரியலூர்75https://www.drbariyalur.net/
13தென்காசி83https://drbtsi.in/
14திருநெல்வேலி98https://www.drbtny.in/
15சேலம்276https://www.drbslm.in/
16கரூர்90https://drbkarur.net/
17தேனி85https://drbtheni.net/
18சிவகங்கை103https://www.drbsvg.net/
19தஞ்சாவூர்200http://www.drbtnj.in/
20ராமநாதபுரம்114http://www.drbramnad.net/
21பெரம்பலூர்58https://www.drbpblr.net/
22கன்னியாகுமரி134http://www.drbkka.in/
23திருவாரூர்182https://www.drbtvr.in/
24வேலூர்168http://drbvellore.net/
25மயிலாடுதுறை150https://www.drbmyt.in/
26கள்ளக்குறிச்சி116https://www.drbkak.in/
27திருப்பூர்240https://www.drbtiruppur.net/
28காஞ்சிபுரம்274https://www.drbkpm.in/
29கிருஷ்ணகிரி146https://drbkrishnagiri.net/
30சென்னை344https://www.drbchn.in/
31திருப்பத்தூர்75https://drbtpt.in/
32திண்டுக்கல்310https://www.drbdindigul.net/
33நாகப்பட்டினம்98https://www.drbngt.in/
34திருவள்ளூர்237https://www.drbtvl.in/
35தூத்துக்கடி141https://www.drbtut.in/
36நீலகிரி76https://www.drbngl.in/
37கடலூர்245https://www.drbcud.in/
38தர்மபுரி98https://www.drbdharmapuri.net/

மேலே, உள்ளே அட்டவணையில், மாவட்ட வாரியான ஆள்சேர்ப்பு அலுவலக இணையதளம் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர், தாங்கள் சார்ந்த  மாவட்ட ஆள்சேர்ப்பு  அலுவலக இணையதளத்தில் இருந்து அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இதையும் வாசிக்க: TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

நேர்காணல் தேர்வு: 

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத்தேர்வு அந்தந்த மாவட்ட தலைநகரில் மாவட்ட நடத்தப்படும்.

நேர்முகத்தேர்வு நடைபெறுவது தொடர்பான விவரங்கள், மின்னஞ்சல்(E-Mail)/ குறுஞ்செய்தி (SMS) மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க: கிராம உதவியாளர் தேர்வு: அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

First published:

Tags: Tamil Nadu Government Jobs