தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் (Ration Shop) காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு நாள் வெளியாகியுள்ளது.
விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரி (Email ID) மூலம் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வு மையம், நேர்காணல் குழு எண், நேர்முகத் தேர்வு நாள்/நேரம் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
விண்ணப்பித்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு, அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆள்சேர்க்கை அலுவலகம் மூலம் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான பதிவு எண்/கடவு சொல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு எண்/கடவுச் சொல் மூலம், நீங்கள் விண்ணப்பித்த அந்தந்த மாவட்ட இணைதளத்தில் இருந்து அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் வேண்டும்.
நேர்முகத் தேர்விற்கான அனுமதிச் சீட்டு உங்கள் திரையில் தோன்றும். அதனை, உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து கொண்டு, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் வாசிக்க: கிராம உதவியாளர் எழுத்துத் தேர்வு கேள்விகள் கசிவு? தேர்வர்கள் அதிர்ச்சி
அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்ட நாளில், முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எனவே, பிறந்த தேதிக்கான சான்றிதழ் (SSLC/HSC Marksheet), கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், விண்ணப்பத்தில் உள்ளது போன்று 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தற்போது, வேலைபார்க்கும் நிறுவனத்திடம் இருந்து தடையின்மை சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: தட்டச்சர்/சுருக்கெழுத்தர் சான்றிதழ் ஏன் முக்கியமானது?
சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, தகுதியான நபர்கள் மட்டுமே அன்றைய தினம் நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள், நேர்முகத் தேர்வுக்கு வராத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.