Job Alert : ரூ56, 100 சம்பளம் ... தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடம் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2021

  • Share this:
    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Assistant Public Prosecutor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு 24.09.2021 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள்:













































     

    நிறுவனம்
    TNPSC


     

    வேலையின் பெயர்
    Assistant Public Prosecutor
    தேர்ந்தெடுக்கும் முறை எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.


     

    எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி
    எழுத்து தேர்வானது 06.11.2021 அன்று நடைபெற உள்ளது.
    வயது அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2021


     

    கல்வி தகுதி
    அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிஎல் பட்டம் முடித்திருக்க வேண்டும். Bar உறுப்பினராக இருக்க வேண்டும்.


     

    சம்பள விவரம்
    ரூ56100 - 177500/-


     

    விண்ணப்ப முறை
    Online 25.08.2021முதல் 24.09.2021 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்ப கட்டணம்

    ரூ. 100/-

    முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

    நாளிதழில் அதிகாரபூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: