TNPSC Group - IV Vacancies May be Increased: குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பட உள்ள காலியிடங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது, குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கிராம நிர்வாக அலுவலர், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கான குரூப் 4 நிலைத் தேர்வுக்கான அறிவிக்கயை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிக்கையின் மூலம் 7301 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்தது.
இந்த எழுத்துத் தேர்வுக்கு,மாநிலம் முழுவதும் 16.2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். கடந்த, ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில்,கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர். டிசம்பர் மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 2023 ஜனவரி மாத தொடக்கத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பான இறுதி முடிவை டிஎன்பிஎஸ்சி எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, டிசம்பரில் முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்... முக்கிய அப்டேட்..
காலியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு:
இந்நிலையில், தேர்வர்களுக்கு மனநிறைவை அளிக்கும் விதமாக, குரூப் 4 எழுத்துத் தேர்வில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜனவரி தொடக்கத்தில் முடிவு எடுக்கப்படலாம். டிசம்பரில் முடிவுகள் வெளியாக வாய்ப்பில்லை. 7,301 என்ற காலி பணியிடங்கள் அதிகரிக்கிறது. தொடர்ந்து புதிய இடங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. #Tnpsc #GROUP4 @News18TamilNadu @karthickselvaa
— Abinaya P (@Abinaya_Aarthi) December 24, 2022
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகள், ஒரே நிலை எழுத்துத் தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால், எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரோ/ நேர்காணலுக்கு (counselling) அழைக்கப்படுவதற்கு முன்னரோ காலிப் பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும். எவ்வாறாயினும், எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்னரே, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் டிஎன்பிஎஸ்சி திருத்தம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu Government Jobs, TNPSC