Home /News /employment /

கணக்கு அலுவலர் பணி- மாத சம்பளம் 2 லட்சத்துக்கும் மேல் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கணக்கு அலுவலர் பணி- மாத சம்பளம் 2 லட்சத்துக்கும் மேல் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

கணினி வழி கொள்குறி வகைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மொத்தம் 810 மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்

    தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

    காலியிடங்கள்: 25

    சம்பளம்: ரூ. 56,900  முதல்  ரூ. 2,09,200 வரை (நிலை - 23)

    முக்கியமான நாட்கள்:

    அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 15.07.2022

    விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 13.08.2022

    கணினி வழி தேர்வு நடைபெறும் நாள் : 08.10.2022

    எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் தயாரிக்கபபடும் . காலிப்பணியிடங்கள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசையின் படி மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    கல்வித் தகுதி: இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் நடத்திய இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும்.

    தேர்வுக் கட்டணம்: ரூ. 200; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150

    ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

    தேர்வுத் திட்டம்:   கணினி வழி கொள்குறி வகைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மொத்தம் 810 மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.



    விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    01.07.2022 அன்றுள்ளபடி, 32 வயது நிறைவடைந்தவர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் வாசிக்க CTET 2022: டிசம்பரில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு : சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    தெளிவுரைவேண்டுவோர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம், அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரைதொடர்பு கொள்ளலாம். ஒருமுறை பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இதர சந்தேகங்களுக்கு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி