இந்திய அஞ்சல் துறையில் 4,442 காலியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி குறித்த அடிப்படை அறிவு உள்ளவர்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

news18
Updated: April 21, 2019, 5:14 PM IST
இந்திய அஞ்சல் துறையில் 4,442 காலியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
அலுவலகச் சேமிப்பு கணக்கு
news18
Updated: April 21, 2019, 5:14 PM IST
இந்திய அஞ்சல் துறையில் தமிழகத்தில் காலியாக உள்ள 4,442 வேலைவாய்ப்புகளை நிரப்புவதற்கான கடைசி தேதி ஏப்ரல் 15 ஆக இருந்தது. தற்போது, இது ஏப்ரல் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிளை போஸ்ட்மாஸ்டர், உதவி கிளை போஸ்ட்மாஸ்டர், தபால் டெலிவரி செய்பவர்கள் போன்ற 4,442 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியில் சேர்பவர்களுக்குக் குறைந்தபட்சம் 10,000 முதல் 24,470 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.

விண்ணப்பதார்கள் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி குறித்த அடிப்படை அறிவு உள்ளவர்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் உள்ளூர் மொழிகளை எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது..


அஞ்சல் துறையில் உள்ள இந்த காலிப் பணியிடங்களுக்கு http://appost.in/gdsonline/ என்ற இணைப்பிற்குச் செல்வதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கான கட்டணம் 100 ரூபாய் என்றும் கடைசி தேதி 28/04/2019 என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்த மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்க.

மேலும் பார்க்க:

Loading...

First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...