ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNUSRB CR 2022: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 3,552 காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு!

TNUSRB CR 2022: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 3,552 காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு!

காட்சிப் படம்

காட்சிப் படம்

பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் 18 வயது 26 வயது உடையவராக இருக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 3,552 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் கீழ் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூலை 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 15ஆகும். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் ஆர்வலர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in./ என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

  காலிப்பணியிட விவரங்கள் :  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 3,552 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், 2,180 காலிப் பணியிடங்கள் காவல்துறையில் இருக்கின்றன. விசாரணைப் பிரிவில் 1,091 பணியிடங்களும், சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பிரிவில் 161 காலிப் பணியிடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவில் 120 காலிப் பணியிடங்களும் இருக்கின்றன.

  எப்படி விண்ணப்பிக்கலாம்?

  * முதலில் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in./ என்ற பக்கத்திற்கு செல்லவும்.

  * ஹோம்பேஜ் பக்கத்தில் உள்ள “இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான பொதுப்பணி நியமனம் - 2022’’ என்ற ஆன்லைன் விண்ணப்பத்தை கிளிக் செய்யவும்.

  * உங்கள் சுய விவரங்களை கொடுத்து முதலில் ரெஜிஸ்டர் செய்த பிறகு, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். மேலே கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.

  * விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

  * விண்ணப்பத்தை உங்கள் எதிர்கால பயன்பாடு கருதி டிவைசில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் அல்லது பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

  இதையும் வாசிக்க சீருடைப் பணியாளர் நியமனம்: துணை ராணுவத்தினர் சிறப்பு இடஒதுக்கீடு கோர முடியாது- தமிழக அரசு

  வயது மற்றும் கல்வித் தகுதி : இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு ஆகும். மொத்தம் பணியிடங்களில் 20 சதவீத இடங்கள், ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழ் மொழிவழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் 18 வயது 26 வயது உடையவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 18 முதல் 28 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்தவர்களில் 18 முதல் 31 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  இதையும் வாசிக்க:  மத்திய உள்துறை அமைச்சகத்தின் நுண்ணறிவு பிரிவில் வேலை - ஒன்றரை லட்சம் வரை சம்பளம்!

  தேர்வு முறை: விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, குற்றப்பின்னணி இல்லாத நற்சான்று விசாரணை ஆகியவற்றை மேற்கொண்ட பிறகு பணி நியமனம் நடைபெறும். தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Government jobs, TN Police