குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு பெண் பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் 'அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்'(OVERSEAS MANPOWER CORPORATION LIMITED) தெரிவித்துள்ளது.
காலியிடங்கள் என்னிக்கை : 500
மாத ஊதியம்: மாத ஊதியம் ரூ.29,500/- முதல் ரூ.32,000/- வரை வழங்கப்படும்.
வயது வரம்பு: 30 முதல் 40 வரை.
கல்வி அனுபவம்: 10ம் வகுப்புத் தேர்ச்சி
மேலும், மருத்துவ பரிசோதனை கட்டணம், விசா, விமான பயணச்சீட்டு, உணவு, இருப்பிடம், மருத்துவம், காப்புறுதி மற்றும் இதர சலுகைகள் குவைத்நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்.
நேர்காணல் நடைபெறும் இடம்: சென்னை, கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டை
எனவே, குவைத் நாட்டில் வீட்டு பெண் பணியாளராக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிவரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்துடன் omchousemaidkuwait21@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் வாசிக்க: TNPSC: அதிகரிக்கும் குரூப் 4 காலியிடங்கள்... கட் ஆஃப் குறையுமா? - களநிலவரம் இதுதான்!
மேற்கண்ட வேலைக்கான விவரங்களை www.omcmanpower.com என்ற வலைதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். தொலைபேசி எண்கள் 044 - 22505886/044-22500417 மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment