முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / முதியோர்களுக்கான அரசு ஓய்வூதிய திட்டங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

முதியோர்களுக்கான அரசு ஓய்வூதிய திட்டங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

காட்சிப் படம்

காட்சிப் படம்

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களில் வெறும் 30% பேர் மட்டுமே முதயோர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கின்றனர். இதில், 16% மட்டுமே ஓய்வூதியத் தொகையை பெறுகின்றனர்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

How to apply Old age pension scheme : தமிழ்நாட்டில் முதியோர் பென்சன் தொகை நிறுத்தப்பட்டு விட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, முதியோர் பென்சன் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாது இருக்கும் நிலையில், இதுபோன்ற தவறான  தகவல்கள் திட்டத்தின் நோக்கத்தை அடையவிடமால் செய்து விடும். எனவே, முதியோர் பென்சன் திட்டம் என்றால் என்ன? யார் விண்ணப்பிக்கலாம்? இந்த திட்டத்தில் உள்ள சிக்கல்கள் என்ன? தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாடு சமூக நலத்துறை  இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம்(Indira Gandhi National Old Age Pension Scheme) ,    இந்திரா காந்தி மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Disability Pension Scheme) இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம்(Indira Gandhi National Widow Pension Scheme) ,  கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள்  ஓய்வூதியத் திட்டம்(Destitute / Deserted Wives Pension Scheme), மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் தொகை திட்டம்(Differently Abled Pension Scheme),  திருமணமாகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் (Un-married Women Pension Scheme), ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் (Destitute Widow Pension Scheme) இலங்கை மக்களுக்கான ஓய்வூதியத் திட்டம்  (Srilankan Pension Schemes) உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இதில், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தை தவிர, இதர அனைத்து திட்ட பயனாளிகளுக்கும் மாத உதவித் தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ,1500 வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னதாக அறிவித்திருந்தார்.

முதியவர் பென்சன் திட்டம்:  

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதும் அதற்கு மேலும் வயது முதிர்ந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் விண்ணப்பிக்கலாம். 60 வயது முதல் 79 வயது வரையிலான பயனர்களுக்கு மத்திய அரசு ரூ.200, மாநில அரசு, ரூ.800 என்ற விகிதாச்சாரத்தில் ரூ. 1000ஐ வழங்கி வருகிறது. அதேபோன்று, 80 மற்றும் அதற்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு மத்திய அரசு ரூ.500-ம், மாநில அரசு - ரூ.500 என்ற விகிதாச்சாரத்தில் ரூ. 1000-ஐ வழங்கிவருகிறது.

திட்டத்தின் முக்கிய சவால்கள்: 

  • மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களில் வெறும் 30% பேர் மட்டுமே முதயோர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கின்றனர். இதில், 16% மட்டுமே ஓய்வூதியத் தொகையை பெறுகின்றனர் ( Tamil Nadu J-PAL Survey).
  • இந்த திட்டத்தைப் பற்றிய போதுமான விழிப்புணர்வு மூத்த குடிமக்களிடம் இல்லை.
  • குறிப்பாக, தகுதியான விண்ணப்பபதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதில்லை.
  • தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்:   2011ம் ஆண்டு சமூக பொருளாதார கணக்கெடுப்பின் படி, தகுதியான பயனாளர்களை தமிழ்நாடு அரசு தற்போது அடையாளம் கண்டு வருகிறது. இருப்பினும், இந்த முயற்சியில் பல்வேறு முரண்கள் காணப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

    மேலும், முன்னதாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட மூத்த குடிமக்களுக்கான மாநில வரைவுக் கொள்கையில். " முதயவர்களின்  வயதின் (60-70, 70-80, 80+) அடிப்படையில் வகைப்படுத்தி, வயது மூத்த குடிமக்களுக்கு அதிகமான பென்சன் வழங்கப்படும்" என்று தெரிவித்தது.  அதேபோன்று, மூத்த குடிமக்கள் சிறப்பு பிரிவின் கீழ் வரும் ஆதரவற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ஊக்கத்தொகை உயர்த்து வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தது. முன்னதாக, திமுக தனது தேர்தல் அறிக்கையில், ஓய்வூதியத் தொகை மாதம் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

    இதையும் வாசிக்க: வேலைவாய்ப்பில் முதியோருக்கு உதவும் அரசின் SACRED இணையதளம்

    விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச் சான்றுகளை இணைத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும்  (அல்லது)   Tamil Nadu e-Governance agency (TNeGA)  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்

First published:

Tags: Pension Plan