ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

21-ம் தேதி டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு : வெளியானது முக்கிய அப்டேட்

21-ம் தேதி டிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வு : வெளியானது முக்கிய அப்டேட்

மாதிரி படம்

மாதிரி படம்

எழுத்துத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை பணியாளர் தேர்வாணையயம் வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

TNPSC Reporter Examination Hall ticket: தமிழ்நாடு சட்டப்பேரவை  தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள ஆங்கில மற்றும் தமிழ் நிருபர் பதவிக்கான அனுமதிச் சீட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுளளது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 6 ஆங்கில நிருபர் பதவிக்கும், 3 தமிழ் நிருபர் பதவிக்கும் டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்கை அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான, விண்ணப்பங்கள் அக்டோபர் மாதம் 12ம் தேதி வரை பெறப்பட்டன. 

டிஎன்பிஎஸ்பி

இதையும் வாசிக்கTNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது... கட் ஆஃப் மதிப்பெண் என்ன?

 கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். இரண்டு தாள்களைக் கொண்ட எழுத்துத் தேர்வு  21.12.2022 அன்று சென்னை தேர்வு மையத்தில் முற்பகல் மற்றும் பிற்பகல் வேளைகளில் நடைபெறும் என்றும் ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் தெரிவித்திருந்ததது.  

இதையும் வாசிக்க: ரூ.2 லட்சம் சம்பளத்தில் வனத் துறையில் வேலைவாய்ப்பு : டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpsc exams.in ஆகிய இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC