திருவள்ளுர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் கீழ்கண்ட 6 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள மூன்று வட்டார இயக்க மேலாளர்கள் (BMM) மற்றும் 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (BC) பணியிடங்களுக்கு கீழ்கண்ட விவரங்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. வட்டார இயக்க மேலாளர்கள் (BMM) கல்வித் தகுதிகள் விவரம் :
கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி (MS Office) பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியல் அல்லது கணினி உபயோகம் குறித்த பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.
28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.
இருப்பிடம் : திருவள்ளுர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்க வேண்டும்.
2. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கல்வித் தகுதிகள் விவரம்
கல்வித் தகுதி : ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி (MS Office) பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர் மேம்பாடு திட்டம் தொடர்பான பதவிகளில் பணியாற்றி இருக்க வேண்டும்.
இருப்பிடம் : சம்மந்தப்பட்ட வட்டாரத்தை இருப்பிடமாகக் கொண்டு இருக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 15.07.2022
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 15.07.2022
விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி : திட்ட இயக்குநர் /இணை இயக்குநர், : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், திருவள்ளுர் மாவட்டம்.
திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் (மகளிர் திட்டம்) காலியாக உள்ள மேற்குறிப்பிட்ட வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை 15.07.2022-க்குள் அனுப்பி பயன்பெறுமாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy