• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக வேலை

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக வேலை

ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2021

  • Share this:
    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 1949 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துக்களைப் பெறுவதற்கு தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது. புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் நிதியுதவி அளிக்கிறது.

    இந்த நிறுவனத்தில் தற்போது Marketing Executive பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 07.11.2021 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :















































    அறிவிப்பு எண் NOTIFICATION NO.2/TIIC/2021
    நிறுவனம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC )
    வேலையின் பெயர் Marketing Executive
    காலிப்பணி இடங்கள் Various
    வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 33 வயது
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 24.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 07.11.2021
    கல்வி தகுதி அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவை இல்லை

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.tiic.co.in/mktg_recruitment/Dashboard.aspx இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: