ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு.. மாதம் ரூ.50000 சம்பளம்..!

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு.. மாதம் ரூ.50000 சம்பளம்..!

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

Govt Jobs: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, வரும்  டிசம்பர் 19-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி,  வயது வரம்பு, கட்டணம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவைப் பற்றி இங்கு பாப்போம்.

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்சம்பளம்தகுதி
ஓட்டுநர்1ரூ.18,500-58600/-8 ஆம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் 1 ஆண்டு அனுபவம்.
தபேதார்1ரூ.15,900-50,400/-8 ஆம் வகுப்பு தேர்ச்சி
உதவி மின் பணியாளர்1ரூ.16,600-52,400/-எலக்ரிகல் /வயர்மேன் பிரிவில் ஐடிஐ படிப்பு.
வேதபாராணம்1ரூ.15,700-50,000/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
காவலர்2ரூ.15,900-50,400/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
உதவி சுயம்பாகம்2ரூ.10,000-31,500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
உதவி பரிச்சாரகம்1ரூ.10,000-31500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
சமையலர்1ரூ.10,000-31,500/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையல் அனுபவம் வேண்டும்.
சமையல் உதவியாளர்1ரூ.6,900-21,500/-எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உணவு தாயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
துப்புரவாளர்1ரூ.4,200-12,900/-தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 19.12.2022. மாலை 05.45 மணி வரை. ( விண்ணப்பங்கள் அலுவலகத்திற்குச் சென்றிருக்க வேண்டும்)

இந்து சமய அறநிலையத்துறை பணியின் பொது நிபந்தனைகள்: 

தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

Read More : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.58000 வரை சம்பளத்தில் வேலை... முழு விவரம் இதோ

விண்ணப்பப் படிவம்:  இதற்கான விண்ணப்பத்தை thiruvottiyurvadivudaiamman.hrce.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் மூலம் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர் /செயல் அலுவலர். அருள்மிகு தியாகராஜகசுவாமி திருக்கோவில் திருவொற்றியூர், சென்னை - 19 ஆகும்.

First published:

Tags: Employment, Job