பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் வரும் ஏப்ரல் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலிப்பணியிட விவரம்:
பதவியின் பெயர் | சம்பள விகிதம் | காலி பணியிடம் | கல்வித் தகுதி |
ஆசிரியை | level – 25Matrix-119,500/62,000 | மொத்த - 16 ஆங்கிலம்- 2, தமிழ் -4, கணிதம் -2 , வரலாறு - 2, இயற்பியல் -1, வேதியியல்- 1, உயிரியல் - 1, இசை ஆசிரியை - 1, உடற் கல்வி ஆண் - 1, உடற் கல்வி பெண் - 1 | தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும் சட்டம்) 1973ன் படி நியமனம் செய்யப்படும். |
ஆய்வக உதவியாளர் | level – 17Matrix-115,900/50,400 | 1 | தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குப்படுத்தும் சட்டம்) 1973ன் படி நியமனம் செய்யப்படும் |
வேதபாட சாலை (சிவ ஆகம ஆசிரியர் ) | level – 28Matrix-135,400/1,12,400 | 1 | தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், ஆகம பள்ளி வேத பாடசாலையில் மூன்றாண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். |
தேவார ஆசிரியர் | level – 28Matrix-135,400/1,12,400 | 1 | தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், ஆகம பள்ளி வேத பாடசாலையில் மூன்றாண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் |
அதேபோன்று- தட்டச்சர், நூலகர், கூர்க்கா, போன்ற வெளித்துறை பிரிவின் கீழ் 174 காலியிடங்களும்; கணினி பொறியாளர், இளநிலை பொறியாளர் போன்ற தொழில்நுட்ப பிரிவின் கீழ் 82 காலிப்பணியிடங்களும்; நாதஸ்வரம், தவில் போன்ற பிரிவின் கீழ் 14 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. மொத்த அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 281 ஆகும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதிற்கு உட்பட்டவராகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: இன்றே விண்ணப்பியுங்கள்: உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பணிக்கு 550 காலியிடங்கள்
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறையானது அடிப்படை கல்வித் தகுதி, அனுபவம், செயல்முறை தேர்வுகள் கூடுதல் தகுதி மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.
விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் பெற்றுக்கொள்ளலாம். செலுத்தி அலுவலக நேரத்தில் நேரில்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, "இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் -624 601" என்ற முகவரிக்கு நேரிலோ/ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் தலையை ஒட்டி சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 07.04.2023 பிற்பகல் 5.45 மணி ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.