ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

ஆவடி மாநகராட்சி -

ஆவடி மாநகராட்சி -

3417 additional staff for 20 municipal corporations: பொதுமக்கள் சேவையை மேம்படுத்துதல், வருவாயை பெருக்குதல் ஆகிய காரணங்களாக புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  Municipal Corporation Staff: 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் உருவாக்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  புதிய மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம், கடலூர், காஞ்சிபுரம், ஒசூர், தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிகளில் போதுமான பணியிடங்கள் இல்லை என புகார் வந்த நிலையில் சென்னை நீங்கலாக மற்ற மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  மாநகராட்சிகளில் ஏற்கனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்துவது தொடர்பாகவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்கரூ.36,000 சம்பளத்தில் எஸ்பிஐ வங்கியில் கொட்டி கிடக்கும் காலி பணியிடங்கள்

  இதுகுறித்து, வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:  மாநகராட்சிகளின் தற்போதைய நிலவரப்படியான மக்கள் தொகைக்கு ஏற்றவாறு, மாநகராட்சி பணியிடங்கள் ஒரே சீராக இல்லை.

  மேலும், சிறப்பு நிலை நகராட்சிகளிலிருந்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட தூத்துக்குடி, திருப்பூர், நாகர்கோவில், ஓசூர். திண்டுக்கல், தஞ்சாவூர் முதலான மாநகராட்சிகளில், சில சிறப்பு நிலை நகராட்சிகளில் காணப்படும் பணியிடங்களுக்கும் குறைவான பணியிடங்களே உள்ளன.

  மேலும், புதிதாக மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம், கடலூர், காஞ்சிபுரம். சிவகாசி, கரூர், கும்பகோணம் ஆகிய 6 மாநகராட்சிகளிலும் சீரான நிர்வாகம் மற்றும் திட்டப் பணிகள் செயல்படுத்துதல், நகரமைப்புப் பணிகள் மேற்கொள்ளுதல், திடக்கழிவு மற்றும் பொது சுகாதார பணிகள் மேற்கொள்ளுதல், பொதுமக்கள் சேவை மேம்படுத்துதல், வருவாய் பெருக்குதல் ஆகியவற்றை தொய்வின்றி செயல்படுத்த போதுமான பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டியது அவசியமானதாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்கமகளிர் தனிச்சிறையில் வேலை வாய்ப்பு; ஆர்முள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job, Job Vacancy, Recruitment