சென்னையில் தொழில் துறை சார்பில் "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" என்ற முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டின் வாயிலாக மொத்தம் 60 திட்டங்களின் மூலம் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில், 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஏற்பாட்டின் கீழ், L& T நிறுவனம் கோயம்பத்தூர் மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்பத் திடத்தையும், Equinix நிறுவனம் சிறுசேரி, செங்கல்பட்டு மாவட்டங்களில் தகவல் தரவு மையம் அமைக்கும் திட்டத்தையும், Mahindra & Mahindra Limited நிறுவனம் செங்கல்பட்டு, செய்யாறு மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய விரிவாக்கம் மற்றும் சோதனைச் சாலை விரிவாக்கம் திட்டத்தையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய நிகழ்ச்சியில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 22,252 கோடி ரூபாய் முதலீட்டில் 17,654 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் 21 திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினர்.
மேலும், காஞ்சிபுரம், ஈரோடு, கோயம்பத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,497 கோடி ரூபாய் முதலீட்டில் 7,050 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 12 திட்டங்களின் வணிக உற்பத்தியினைத் முதலமைசச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும், இன்றைய நிகழ்ச்சியில், உயிர் அறிவியல் மட்டும் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையில் தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் உயிர் அறிவியல் மேம்பாட்டுக் கொள்கை (Tamil Nadu Life Science Promotion Policy) மற்றும் தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை (Tamil Nadu R&D Promotion Policy) 2022-ஐ முதலமைச்சர் வெளியிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Tamilnadu