ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பெண்களுக்கான பிரத்தியேக அரசு வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!

பெண்களுக்கான பிரத்தியேக அரசு வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!

சகி - ஒன் ஸ்டாம் சென்டரில் வேலை

சகி - ஒன் ஸ்டாம் சென்டரில் வேலை

சமூகநல அலுவலகத்தின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ சகி - ஒருங்கிணைந்த சேவை மையத்தில்‌ காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திண்டுக்கல்‌ மாவட்ட சமூகநல அலுவலகத்தின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ சகி - ஒருங்கிணைந்த சேவை மையத்தில்‌ (Sathi-One Stop Centre) வழக்குப்‌ பணியாளர்‌, பாதுகாவலர்‌, பல்நோக்கு உதவியாளர்‌ பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்குப் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்பணியிடங்கள்சம்பளம்:
  வழக்குப்‌ பணியாளர்‌-12ரூ.15,000/-
  வழக்குப்‌ பணியாளர்‌-23ரூ.15,000/-
  பாதுகாவலர்‌1ரூ.10,000/-
  பல்நோக்கு உதவியாளர்‌1ரூ.6,400/-

  வயது வரம்பு :

  அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  கல்வித்தகுதி:

  வழக்குப்‌ பணியாளர் பணிக்கு இளங்கலை சட்டம்/சமூகப்பணி/சமூகவியல்/சமூக அறிவியல் உளவியல் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

  பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணிக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  தமிழக அரசின் பெண்களுக்கான பிரத்தியேக பணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெண்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://dindigul.nic.in/notice_category/recruitment/

  Also Read : யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி... நாளை மறுநாள் நுழைவுத்தேர்வு

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

  சமூக அலுவலர்,

  மாவட்ட சமூகநல அலுவலகம்,

  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,

  அறை எண்.88 (தரைதளம்),

  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,

  திண்டுக்கல் மாவட்டம் - 624004.

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 25.11.2022 மாலை 05.45 மணி வரை.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs, Woman