Home /News /employment /

அரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க விருப்பமா ? இந்த அறிவிப்பு உங்களுக்குத் தான்

அரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க விருப்பமா ? இந்த அறிவிப்பு உங்களுக்குத் தான்

தமிழக அரசு

தமிழக அரசு

தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் தொகுத்து வழங்கும் பணி.

    அரசு விழாக்களில் விழாவினை தொகுத்து வழங்க ஆர்வமும் விருப்பமுடைய நிகழ்ச்சி தொகுப்பளார்கள் விண்ணப்பிக்கலாம் என்று செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, மக்கள் தொடர்பு துனைச் செயலாளர்  அனைத்து துறைச் செயலாளர்களுக்கு அனுப்பிய  கடிதத்தில்

    தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் தொகுத்து வழங்க ஆர்வமும் விருப்பமுடைய நிகழ்ச்சி தொகுப்பளார்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

    தங்கள் துறையில் பணியாற்றி வரும் தூயத் தமிழில்/ஆங்கிலத்தில் பேசக்கூடியவராகவும், நல்ல குரல் வளத்துடன் கூடிய ஆர்வமுடையோராகவும் இருத்தல் வேண்டும்.

    இயக்குநர்,

    செய்தி மக்கள் தொடர்பு துறை, தலைமைச் செயலகம்,

    சென்னை,

    என்ற முகவரியில் ஜுலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    இதையும் வாசிக்க தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    மேற்கண்ட தகவலை அனைத்து பணியாளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் தங்கள் அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் பார்வைக்காக வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இதையும் வாசிக்க3552 காலி இடங்களுக்கான காவலர்கள்/சிறைக் காவலர்கள் ஆள் சேர்ப்பு - ஜூலை 7 முதல் விண்ணப்பிக்கலாம் 

    இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Government jobs

    அடுத்த செய்தி