ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சர்ச்சைக்குள்ளான டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணை - தமிழக அரசு விளக்கம்.

சர்ச்சைக்குள்ளான டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணை - தமிழக அரசு விளக்கம்.

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

TNPSC : டிஎன்பிஎஸ்சியின் 2023 ஆம் ஆண்டின் திட்ட அட்டவணை 1,754 பணியிடங்களைக் கொண்டு வெளியாகி சர்ச்சைக்குள்ளானது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டனர். அதில் 1,754 பணியிடங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தது. மேலும் குரூப் 4 & 1 தேர்வுக்கு பணியிடங்களின் எண்ணிக்கை வெளியாகவில்லை. இந்த நிலையில் சர்ச்சைக்குள்ளான திட்ட அட்டவணை குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி 2023 ஆம் ஆண்டுக்கான போட்டி தேர்வு திட்ட அட்டவணை:

2023 ஆம் ஆண்டு அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி திட்ட அட்டவணையை இந்த மாதம் வெளியிட்டனர். அதில் 10 தேர்வுகளில் 1,754 பணியிடங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தது. மேலும் குரூப் 1 & 2 பற்றிய தகவல்கள் இடம்பெறவில்லை. அதிக பணியிடங்களைக் கொண்ட குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் இடம்பெறவில்லை.

10 தேர்வுகளில் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படவுள்ளதாக சமூக ஊடகங்களிலும் சில பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. அவை முழுமையான தகவல்கள் இல்லை என்றும் அதனை மறுத்து விளக்க விவரங்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு :

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளிலிருந்து நேரடி நியமனத்திற்காகப் பெறப்படுகின்ற காலிப்பணியிடங்களுக்கான மதிப்பீடுகளின் அடிப்படையில் போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு வருகின்றது என்று கூறியுள்ளனர். மேலும் தற்போது ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படுவது முதற்கட்டமாகத் தகவல்களை அளிக்கும் அட்டவணை தான் என்று கூறியுள்ளனர்.

கூடுதல் பணியிடங்கள் கணக்கிடப்படும் போது அட்டவணையில் சேர்த்து புதிய அட்டவணை வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

அரசுப் பணிகள் :

அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்று தெரிவித்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குறைந்த அளவிலேயே பணியிடங்களை வெளியிட்டுள்ளனர் என்று எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் அரசுப் பணியிடங்களை நிரப்பும் வாரியத்தில் விவரங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.

அரசுப் பணியிடங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமின்றி ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மற்றும் வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் ஆகியவற்றின் மூலமாகவும் ஒவ்வோர் ஆண்டும் நிரப்பும் பணிகளை மேற்கொள்வதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும் இவை தவிர அரசு வாய்ப்பகங்கள் மூலமாகவும் செய்தித் தாள்களில் உரிய விளம்பரம் செய்யப்பட்டும் பல்வேறு அரசுப் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன மற்றும் பணிக்காலத்தில் மரணமடையும் பணியாளர்களில் வாரிசுக்குக் கருணை அடிப்படையில் பணி வழங்குவது போன்ற நடவடிக்கைகளும் அரசு மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

அரசு ஏற்படுத்தித் தரும் தனியார் வேலைவாய்ப்பு:

அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலமாகக் கடந்த ஒற்றை ஆண்டுக் காலத்தில், மொத்தம் 1.063 முகாம்கள் நடத்தப்பட்டு 1.21.551 நபர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வழங்கியதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளனர். மேலும் இப்பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Also Read : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள்... முக்கிய அப்டேட்..

முடிவுகள் தாமதமாகும் காரணம்:

அரசின் போட்டி தேர்வுகளில் முடிவுகள் வெளியாவதில் தாமதமாவதற்கு முடிவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளும் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் காரணம் என்று அரசு தெரிவித்துள்ளது.

அவ்வாறு தொடரப்படும் வழக்குகளில் காரணமாக அமையும் காரியங்களை உணர்ந்து அரசு உரிய விதிகளைப் பரிசீலனை செய்து வருகிறது. மேலும் திருத்தங்களுக்கான நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

முறையாக நிரப்பப்படும்:

அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை ஒவ்வோர் ஆண்டும் மதிப்பீடு செய்து முறையான நிரப்புவதையே அரசு கொள்கையாக வைத்துள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் தொடர்ந்து கட்டாயமாக மேற்கொள்வோம் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC